மக்களவை தேர்தலில் மத்திய ஜவுளி துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும் ஆன ஸ்மிரிதி ராணி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ராகுல் காந்தியை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார்.
2014 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு ஸ்மிரிதி ராணி தோல்வி அடைந்தார். அதன் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யபட்டு மத்திய அமைச்சர் ஆனார். கடந்த முறை ஸ்மிரிதி ராணி தன் வேட்புமனுவில் டிகிரி முடித்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் அவர் டிகிரி முடிக்கவில்லை எனவும் பொய்யான தகவல்களை அளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அமேதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த ஸ்மிரிதி ராணி பி காம் படிப்பை மூன்று ஆண்டுகள் முடிக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டு உள்ளார். தனது சொத்து மதிப்பு 4.71 கோடி எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.