புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படத்துக்கு ‘ராட்சசி’ என்று தலைப்பிட ஆலோசனை செய்து வருகிறது படக்குழு. இதில் அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. அரசுப் பள்ளி மாணவர்களிடையே படிப்பை மேம்படுத்தும் ஆசிரியையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் பொருட்செலவில் பள்ளி மாதிரி அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.
இதன் படபிடிப்பு வேலைகள் இன்னும் நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றன. அதற்குள் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கும் காலகட்டத்தில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
ஜோதிகாவின் அடுத்த படம்?
