ஜேசன் ஹோல்டர் தடைக்கு எதிர்ப்பு

ஆண்டிகுவாவில் 2 ஆம் தேதி நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்  ஜேசன் ஹோல்டர்க்கு 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடைவிதித்து உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே “வேதனையான விஷயம். மூன்று நாட்கள் கூட போட்டி செல்லவில்லை. நீங்கள் இதை மேல் முறையீடு செய்யலாம் ஜேசன் ஹோல்டர். என்ன ஒரு மோசமான முடிவு இங்கு பொது அறிவு எங்கே போனது ஒரு அற்புதமான தொடரில் வெற்றி பெற்று உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி தேவை . அதற்கான தொடக்கம் இதுதான் என  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *