வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் வோடாபோன் நிறுவனம் 1.10 லட்சம் கோடி ரூபாயும், ஐடியா நிறுவனம் 7,250 கோடி ரூபாயும் முதலீட்டை அதிகரித்து ஜியோவுக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்த உள்ளன.
ஆதித்யா பிர்லா குழுமம் இந்த முதலீட்டைச் செய்வதற்காகத் தங்களது துணை நிறுவனமான இண்டஸ் டவர்ஸ்ன் 11.5 சதவீத பங்குகளை ஏர்டெல்லுக்கு விற்க முடிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் வணிக ரீதியான டெலிகாம் சேவையைத் தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ குறைந்த காலத்தில் 28 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.