இந்தியாவில் எல்லை பகுதியில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவதற்காக ராணுவப் பயன்பாட்டிற்கான அதிநவீன ஜிசாட்-7ஏ செயற்க்கைகோள் இன்று மாலை 4.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி மற்றும் இந்திய குடியரசு தலைவரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த ஜிசாட்-7ஏ செயற்க்கைகோள் ஆனது ஜிஎஸ்எல்வி-எப்11 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஜிசாட்-7ஏ செயற்க்கைகோளின் மொத்த எடை 2250 கிலோ ஆகும்.
இதில் அதி நவீன தொழில்நுட்பக் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இது 800 கோடி மதிப்பிட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=bB25-ezRny8&feature=youtu.be
நன்றி! ANI
ஜிசாட்-7ஏ செயற்க்கைகோள் ஆனது இந்தியாவின் 35 வது தகவல் தொடர்ப்பு செயற்க்கைகோள் ஆகும். ஜிசாட்-7ஏ செயற்க்கைகோளின் ஆயுட்காலம் 8ஆண்டுகள் ஆகும். போர்க்காலக்காளில் விமானப் படைகளுக்குப் பெரிதும் பயண் உள்ளதாக இருக்கும். இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இஸ்ரோ இந்த ஜிசாட்-7ஏ செயற்க்கைகோளினை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கிறது.