குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் பிரதமா் மோடி இவ்வாறு குறிப்பிட்டாா்.
