ஜாக்டோ ஜியோ குறித்து டிடிவி தினகரன்

JACTO-GEO அமைப்பினர் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக பல மாதங்களாக போராடிவருகின்றனர். அவ்வாறு போராடுபவர்கள் வேறுயாருமல்ல நாளைய சமுதாயத்தை சீர்தூக்கி நிறுத்தவுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான்.

தற்போது போராடும் ஆசிரியர்களுக்கு பதிலாக பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதில் செலுத்தும் கவனத்தை அவர்களது கோரிக்கைககளின் மீது செலுத்தியிருந்தால் போராட்டம் இந்த அளவிற்கு தீவிரம் அடைத்திருக்காது. குறைந்தபட்சம் அவர்களது கோரிக்கைகளில் முடிந்தவற்றையாவது நிறைவேற்றி தர உறுதி அளித்திருந்தால் அவர்கள் போராட்டத்தை கைவிடவோ அல்லது தள்ளிவைக்கவோ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அதை செய்யாமல் அவர்களது போராட்டத்தை ஒடுக்கும் விதமாக சங்க நிர்வாகிகளை தேடித்தேடி கைது செய்வதாக வரும் செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது. இனிமேலாவது மிரட்டும் போக்கை கைவிட்டு அவர்களை அழைத்துப்பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *