இந்தியா

ஜமாஅத்தில் இருந்து நீக்கம்

சபரிமலை விவாகரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். என கேரள முஸ்லிம் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சில பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய முற்பட்டனர். அது விவாதப் பொருளானது. அதன்பிறகு அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவியது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரெஹானா எந்தவித விருதமும் இல்லாமல் அரிசிக்குப் பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்றார்.
அங்கு ஏற்பட்ட பிரச்சனையின் இறுதியில் திருப்பி அனுப்பபட்டார்.
கேரள மாநில முஸ்லீம் ஜமாத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய முயன்றது மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், சம்பிரதாயங்களையும் மதிக்க தவறி காயப்படுத்தினார். எனவே அவரையும், குடும்பத்தினரையும் தள்ளி வைக்குமாறு எர்ணாகுளம் முஸ்லீம் ஜமாஅத் அறிவுறுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker