தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது எனவும்
ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா எனவும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர் திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பாஜக – அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை எனவும் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா?
