சொதப்பிய உமேஷ் யாதவ், பும்ரா போராட்டம் வீண்

நேற்று விசாகபட்டினத்தில் நடந்த டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்தது 126 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்கத்தில் விக்கெட்களை இழந்ததால் பெரிய இலக்கை இலக்கை இந்திய அணியால் அடைய முடியவில்லை. அதிகபட்சமாக ராகுல் 50 ரன்கள் அடித்தார். அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பாக செயல் பட்டாலும் பிற்பாதியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் தடுமாறியது.

இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை நிலையில் பந்து வீச வந்த பும்ரா சிறப்பாக பந்து வீசி இரண்டு ரன்களை விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். கடைசி ஓவரை வீச வந்த உமேஷ் யாதவ் 14 ரன்களை விட்டுகொடுத்து வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தார்.அந்த அணியின் மேக்ஸ்வெல் 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார் பும்ரா. உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுகொடுத்து விக்கெட் எதும் கைப்பற்றவில்லை. ஆட்ட நாயகன் விருதை நாதன் கோல்டர் நைல் பெற்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *