ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு, டி-20 பயிற்சிப் போட்டி நடத்தப்பட்டது. சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், அம்பதி ராயுடு, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். இப்பயிற்சி ஆட்டத்தை சுமார் 12,000 ரசிகர்கள் கண்டு களித்தனர்.
