செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

செவ்வாய் தோஷம் என்று தெரிந்ததுமே ஜோதிடர்கள், “ஒரு தடவை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போய் பரிகாரம் செய்துவிட்டு வந்து விடுங்கள்” என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பழனி உள்பட பல தலங்கள் இருந்தாலும் வைத்தீஸ்வரன் கோவில் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

இந்த ஆலயம் தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றாகும். வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.

செவ்வாய் தோஷம் நீங்க.

இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த சேத்திரத்திற்கு மேலும் அதிகமாயிற்று.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும்.
செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

செவ்வாய் தோஷ பரிகாரம்:

பரிகாரம் செய்யும் பக்தர்கள் ஜடாயு குண்டத்தில் குளித்துவிட்டு அதன் பிறகு ஆலயத்திற்குள் சென்று வைத்தியநாதரை வழிப்பட வேண்டும்.

பூஜை நாள் :செவ்வாய்

நிறம் : சிவப்பு

தானம்: தரிசனத்திற்கு பிறகு ஏழைகளுக்கு சிவப்பு நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்

 

வைத்தீஸ்வரன் கோவில் பற்றிய தகவல்கள்.

 

புள்ளிருக்குவேளூர் பெயர்க்காரணம்

சடாயு] என்னும் புள்  (பறவை), இருக்கு- வேதம் (ரிக்கு வேதம், முருகவேள் சூரியனாம் ஊர்  ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர்[  எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.

பெயர்க் காரணம்:
புள் (ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.

தீர்த்தம்:
கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.
சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர்.
இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள்ளன.

தலப்பெருமை:
முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளா கின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.[6] என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

பாடல்பெற்ற தலம்

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடியத்தலமாகும். ஆகையால் இது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.

கல்வெட்டு:

தமிழ் ஆண்டு சகம் 1814 (கி.பி.1892) அங்கு வாழ் நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. தமிழ் ஆண்டு சகம் 1689 (கி.பி. 1767) ராசாமகாராசர் [7] காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் [8] திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (கி.பி.1770) துளசாமகாராசர் [9] காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (கி.பி. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் சிறப்பம்சம் :
இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது.
இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார்.
மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.
சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சினை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

சடாயு குண்டம்:
சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது.
இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.

திருவிழாக்கள் :
நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார்.
மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திருமுன்னிலையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி.
அங்காரக் க்ஷத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டு தோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன.
“தையல் நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.

கோவிலின் அமைப்பு:
நகரின் நடுவே நால்புறமும் உயர்ந்த சுற்று மதில்களால் சூழப்பட்டு மிக அழகாக விளங்குகிறது. முன்புறம் ராஜகோபுரமும், பின்பக்கம் கட்டைக் கோபுரமும், தென்புறம் சாதாரண வாயில் ஒன்று இருக்கிறது.
ஆலயத்திற்குள் இரண்டு பெரிய பிரகாரங்களும் திருமதிலின் வெளிப்புறம் மாடவிளாகமும் அமைந்திருக்கிறது. அம்மையும், அம்பிகையும் வலம் வர தனித்தனிப் பிரகாரங்கள் உள்ளன.
ஆலயத்தின் கீழ் திசையில் வைரவக்கடவுளும், மேற்திசையில் வீரபத்திரக் கடவுளும், தென் திசையில் கற்பக விநாயகரும், வட திசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர்.
மேலைக் கோபுர வாசல் வழியாகச் சென்றால் வெள்ளியாலும், தங்கத்தாலும் இரு கொடி மரங்கள் இருப்பதை காணலாம். கீழ்புறம் ஆறுமுகக்குமாரர் கர்ப்பக்கிருகம் அமைந்துள்ளது. வடக்கு பிரகாரத்தில் ஆவுடையம்மன் என்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த பிரகாரத்தில் செல்வமுத்துக்குமார் சன்னதி உள்ளது. சன்னதிக்கு ஒரு கட்டை கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தின் தென்புறம் ஜூரகரேசுவரர், நவக்கிரக மண்டபம் உள்ளது.
கிழக்கு முகமாகத் தண்டாயுதபாணி, தெற்கு முகமாக அங்காரகன் ஆகிய மூலவர்களின் சன்னதி அமைந்துள்ளது. கீழை பிரகாரத்தின் கீழ்பால் வேம்பு தலவிருட்சம் உள்ளது. இதுதான் ஆதி வைத்தியநாதபுரி என வழங்கப்படுகிறது. அங்குள்ள கட்டை கோபுர வாயிலையட்டி ஆதிபுராணேசுவரர், வீரபத்திரர் திருஉருவங்கள் உள்ளது.
மடைப்பள்ளியின் மேற்கு முகமாக அன்னபூரணி அம்மன் திருஉருவம் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்திற்கு தெற்கில் அம்மன் சன்னதியில் சீத்தாமிர்த தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் நால்புறமும் திருமாளிகை பத்தி மண்டபங்கள் அமைந்துள்ளன.
சுவாமி சன்னதியின் வடக்கே முதலில் பள்ளியறையும் அதற்கடுத்து சுக்ரவார அம்மன் உற்சவரும் தையல்நாயகி சன்னதியும் அமைந்துள்ளது. சுவாமி சன்னதிக்கு செல்லும் முதல் வாயிற்படியின் இருபுறம் உள்ள குடைவறைகளில் வடக்கில் அதிகார நந்தி உற்சவரும், தெற்கில் சடாயு உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.
சுவாமி சன்னதிக்கு மேற்குபுறம் செல்வமுத்து குமாரசாமி உற்சவர் வள்ளி தெய்வானையோடும் எழுந்தருளி உள்ளனர். அதற்கடுத்து கஜலட்சுமியும், அஷ்டலட்சுமியும் உள்ளனர். வடக்கு பகுதியில் ஸ்ரீநடராஜர் சிவகாமி அம்மையோடு எழுந்தருளியுள்ளார்.
சுவாமி கர்ப்பக கிரகத்தில் வடக்கே எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மன் மகிமை மிக்கவள். கீழை திருமாளிகைப் பகுதியில் சூரியன் அங்காரகன் நீங்கலாக நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. தெற்கு பிரகாரத்தில் அறுபத்துமூவர் மூலவர்களும் சப்த கன்னிகளும் அமைந்துள்ளனர்.

இறைவனது பிரசாதம் சந்தனம்

இத்தலத்தில் முருகப்பெருமான் ஸ்ரீசெல்வமுத்துக் குமரனாக வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். அவருக்கு அர்த்தயாமப் பூஜையில் சந்தனம் சாத்தப்படும். இதனை அணிபவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கிறது. இக்கோவிலில் திருச்சாந்து உருண்டையாக இதனை விபூதியுடன் சேர்த்துக் தருவார்கள். இதனை உண்பவர்களுக்கு வினையெல்லாம் தீர்ந்து விடுகிறது.

பெயர்: வைத்தியநாதர் கோவில்

மூலவர்: வைத்தியநாதர்

தாயார்:தையல்நாயகி

மூர்த்தி: பஞ்சமூர்த்திகள், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) தன்வந்திரி, ஜடாயு  பத்ரகாளி, அறுபத்து மூவர்.

தல விருட்சம்:வேம்பு

தீர்த்தம்:சித்தாமிர்தம்

ஆகமம்: காமிக ஆகமம்

பாடல் வகை:தேவாரம்

பாடியவர்:திருஞானசம்பந்தர்

வேறு பெயர்கள்:
சடாயு பூஜித்தமையால் சடாயுபுரீ என்றும், வேதங்கள் பூஜித்தமையால் வேதபுரி என்றும், கந்தன் பூஜித்தமையால் கந்தபுரி என்றும், சூரியன் பூஜித்தமையால் பரிதிபூரி என்றும், அம்பிகை பூஜித்தமையால் அம்பிகாபுரி என்றும், அங்காரகன் பூஜித்தமையால் அங்காரபுரி என்றும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பெயர் உண்டு.
இந்த ஆலயத்துக்கு தையல்நாயகி கோவில், வினை தீர்த்தான் கோவில் என்றும் பல பெயர்கள் உண்டு.
முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போர் புரிந்த போது அவனது படைகள் காயமுற்றன. அது கண்டு வருந்திய -கந்தப் பெருமான் அவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டி தன் அம்மை அப்பரை அழைத்தாராம்.
அம்மையப்பனே வைத்தியநாதரும், தையல் நாயகியுமாக வந்திருந்து அடிபட்ட வீரர்களுக்கு வைத்தியம் செய்தனராம். இதனால் இந்த தலத்து இறைவன் வைத்தியநாதர் எனவும், அம்மாள் – தையல்நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள்.

வழிபட்டோர்:

இராமர், ஜடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன், தன்வந்தரி

பாடியோர்:

திருஞானசம்பந்தர், அப்பர், காளமேகப் புலவர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வடுகநாத தேசிகர்.

சுவாமி தரிசனம்: காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  9.00 மணி வரை. ஆறு கால பூஜை நடைப்பெறும்

திருவிழாக்கள்:

கந்தசஷ்டித் திருவிழா,  செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருளுவார், ஆடிப்பூரம், நவராத்திரி, கிருத்திகை, தை மாதத்தில் முத்துக்குமார சுவாமிக்குத் திருவிழா, பங்குனிப் பெருவிழா.

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

இருப்பிடம்:  

அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் MAP LINK

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில், இருந்து சிதம்பரம் சாலையில்,15 கி.மீ தூரத்திலுள்ளது.

சிதம்பரம் to வைத்தீஸ்வரன் கோவில் 25 கி.மீ

மயிலாடுதுறை to வைத்தீஸ்வரன் கோவில் 15 கி.மீ

கும்பகோணம் to வைத்தீஸ்வரன் கோவில் 50 கி.மீ

வைத்தீஸ்வரன் இராயில்வே ஸ்டேசன் to  வைத்தீஸ்வரன் கோவில் 1.3 கி.மீ

மதுரை மீனாட்சி
சூரியன்
சந்திரன்
புதன்
குரு

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *