சென்னையில் இரண்டாவது விமான நிலையம் மாமண்டூரில் அமையவுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இருந்து தெற்கே 80 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மாமண்டூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அதிகாரி தகவல் அளித்துள்ளார். மேலும் இதற்காக 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாகவும், விமான நிலையத்திற்கு மொத்தம் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விமானப் போக்குவரத்து ஆணையம் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.