சென்னையில் 6 மாதங்களுக்கு பின்னர் மழை பெய்துள்ளது. வெப்பம் தணிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை கிண்டி, ஆலந்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுத் தாங்கல், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. 6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் மழை பெய்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.