சூர்யாவுடன் தனது அடுத்த படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறுகிறார்.

விக்ரம் நடிக்கும்,இயக்குனர் ஹரியின் சாமி-2 செப்டம்பர் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹரி மற்றும் விக்ரம் இடையேயான மூன்றாவது கூட்டணி இது.
சாமி-2 குப் பிறகு ஹரி, சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார்.
முன்னதாக இயக்குனர் ஹரி ஒரு நேர்காணலில்,சூர்யாவுடன் தனது அடுத்த திட்டம் சிங்கம் 4 ஆக இருக்காது.ஆனால் புதிய ஸ்கிரிப்ட் என்று, பெயரிடப்படாத திரைப்படத்தைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்ப பொழுதுபோக்குடன்,அதிரடி திரைப்படமாக தயாரிக்க யோசித்திருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். சாமி-2 ஐ மக்கள் குடும்பமாக பார்க்க முடியும். சாமி-2 உடன் ஒப்பிடும் போது சூர்யாவின் படம் குடும்ப உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும், வேல் போன்ற பாணியில் நீங்கள் இதை எதிர்பார்க்கலாம்.
நடிகர் சூர்யா தற்போது கே.வி. ஆனந்த்தின் பெயரிடப்படாத படத்திற்காக படப்பிடிப்பில் உழைத்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் செல்வராகவனின் என் ஜி.கே.வை முடித்துவிட்டு, இறுதிச்சுற்று புகழ் சுதா காங்கரா பிரசாத் படத்தில் நடிப்பார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு நிதி அளிக்கப்படும்.
இந்த படங்கள் முடிந்தபின், சூர்யா மற்றும் ஹரி ஆகியோர் தங்கள் ஆறாவது படத்தின்போது இணைந்து செயல்படுவார்கள். முன்னதாக, இருவரும் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *