இரவு நிறங்களில் நிலவை ரசிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். அப்படிப்பட்ட நிலவின் ரசிகர்கள் இன்றைய நாளை தவற விட்டுவிடாதீ்ர்கள். இன்று நிலவு வழக்கத்தை விட பூமிக்கு வெகு அருகில் வருகிறது. இது போன்ற நிகழ்வு மீண்டும் 2026 ஆம் ஆண்டில் தான் நடைபெறும் என வானிலையாளர்கள் கூறுகிறார்கள். இன்று நிலவு 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் 14 சதவீதம் மேலும் பெரியதாகவும் காணப்படும். இன்று தோன்றும் சூப்பர் மூனை இந்தியாவிலும் ரசிக்கலாம் என வானிலை அறிவியலார்கள் கூறி உள்ளனர்.
சூப்பர் மூன்
