கோலிவுட்சினிமா

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

Super Deluxe Tamil Movie

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் என ஒரு நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்தான் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் நடித்து உள்ள அனைவருமே தங்களின் நடிப்பாற்றலை கச்சிதமாக வழங்கி உள்ளனர்.  ஹார்மோன் பிரச்சனைகளால்  கர்ப்பிணி மனைவியை பிரிந்து செல்லும் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு பிறகு திருநங்கையாக திரும்பி வருகிறார். மகன் படிக்கும் பள்ளிக்கு சென்று அங்கு அவமானபடுகிறார்.

 

சமந்தா வீட்டுக்கு வரும் காதலன் எதிர்பாராமல் இறக்க சமந்தாவும் அவரது கணவர் பகத் பாசிலும் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். ஆபாச படங்களில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணனின் கணவர் மிஷ்கின் சாமியாராக இருந்துகொண்டு மக்களை பாடாய் படுத்துகிறார்.இப்படி வெவ்வேறு சூழ்நிலைகளில் பயணிக்கும் கதையை ரெட்ரோ ஸ்டைலில் பல்வேறு சுவாரசியங்களுடன் தொடர்புபடுத்தி கதை சொல்லி உள்ளார் தியாகராஜன் குமாரராஜா.

திருநங்கைகளை கேலி செய்யும் விதமாகவே பல திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கும் போது அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி சிந்திக்க வைக்கும் படமாக சூப்பர் டீலக்ஸ் வந்து உள்ளது. அனைவரும் திருநங்கை ஆன விஜய் சேதுபதியை கிண்டல் செய்யும் போது அவரது மகன் அவரை தந்தையாக ஏற்று கொள்ளும் காட்சி மனதில் பதிகிறது.

விஜய் சேதுபதியும் திருநங்கையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் படத்தின் சூழலுக்கு ஏற்ற இசையை வழங்கி உள்ளார். நீரவ் ஷா மற்றும் பி எஸ் வினோத் இன் ஒளிப்பதிவு அற்புதமாகவே அமைந்து உள்ளது.சத்தியராஜ் நடராஜின் துல்லியமான படத்தொகுப்பு படத்திற்க்கு வலு சேர்க்கிறது.

”இப்ப தப்பா இருக்குறதுலாம் 100 வருஷத்துக்கு பிறகு சரியா இருக்கும், ஆனா நாம அப்போ இருக்க மாட்டோம்” ”ஷகிலா, சன்னிலியோன் போன்றவர்களுக்கும் மகன் குடும்பம்லாம் இருக்கும்ல”  போன்ற வசனங்கள் திரைக்கதைக்கு பலத்தை தருகிறது.இருந்தபோதிலும் தேவை இல்லாத இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.

 

பெரும்பாலான தமிழ் படங்களில் சொல்லப்படாத கதாபாத்திரங்கள் இந்த படத்தில் தைரியமாக சொல்லப்பட்டு உள்ளன. சில இடங்களில் எதார்த்தத்தை மீறி காட்சி அமைப்புகள் சென்றாலும் சமூகத்தில் நடைமுறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசியதற்காக இயக்குனரை பாராட்டியாக வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker