நேரம் -2 மணிநேரம் 38நிமிடம்.
ஹீரோ – சிவகார்த்திகேயன்
ஹீரோயின்- சமந்தா
டைரக்டர்- பொன்ராம்.
பொன்ராமின் படம் என்றாலே கிராமத்து களத்தைப் பெருமான்மையாக ஆக்கிரமித்து இருக்கும் அதுபோல இந்தப் படமும் ஆரம்பிக்கிறது.
கதைக்கரு:
மக்களின் விளைநிலங்களையும் & சமந்தாவை மீட்டரா என்பது கதை.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சிங்கம் பட்டிக்கும், புளியம்பட்டிக்கும் இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு மார்கெட் சந்தையால் ஆண்டு கணக்கில் பகை. அந்த பகையை சிங்கம்பட்டி சீமராஜா சிவகார்த்திகேயன் எப்படி தன் புத்திசாலிதனத்தால் தீர்த்து, எட்டு வருஷம் நடக்காத கோவில் பரிவட்ட திருவிழாவை நடத்தி காட்டி, தான் உயிருக்கு உயிராய் விரும்பும் புளியம்பட்டி பொண்ணுசுதந்திரதேவி – சமந்தாவை தடை பல கடந்து கரம் பிடிக்கிறார் என்பது தான் “சீமராஜா” படத்தின் கதையும், களமும்
சிவகார்த்திகேயன் மன்னரின் வாரிசாக நடித்துஉள்ளார். அவருக்கு வில்லனின் மகளான சமந்தா மீது காதல் வருக்கிறது.
சீமராஜா பவரான காதபாத்திரதில் இருந்தாலும், பழைய படங்களை போல் எளிமை & அழுத்தமில்லை.
பிளஷ்பேக்கில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சமந்தா அழகாகக் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். புளியம்பட்டி சிலம்பு செல்வி – சுதந்திர செல்வியாக சமந்தா செம. சமத்தா சிலம்பம் எல்லாம் சுற்றும் வீரப்பெண்ணாக மிரட்டியிருக்கிறார்… மிரட்டி. சிவகார்த்தி, படத்தில் ஒரு இடத்தில் சமந்தாவைப் பார்த்து அடிக்கும் “பன்ச்” போன்றே சமந்தா, “சும்மா சாமுத்ரிகா லட்சணுத்துல சலிச்சு எடுத்த சுகர்ல…” அம்மணி அழகு தேவதையாகவும்வசீகரிக்கிறார்.
சீம்ரன் நடிப்பை விடப் பேச்சு அதிகமாக உள்ளது. அவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவரால் சிம்ரனின் வில்லித்தனம் எடுபடுகிறது. சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியன்.மன்னர் வாரிசு அப்பா, மகன் போல் நடந்து கொள்லளாமல் சாதாரணமாகப் பழகுகிறார்கள்.
இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிக்க வைக்கின்றன.பாடல்களில் மட்டுமல்லாது மற்ற காட்சிகளிலும்நெல்லைச் சீமையின் அழகைப் பசுமையாய் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன்.
பொதுவாக சிவகார்த்திகேயன் படங்களில் ஏதாவது ஒரு மைனஸ் இருந்தாலும் ஒரு பிளஸ் இருக்கும். ஆனால் இந்த படத்தில் குறைவு.