ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக விவாதிக்க சீனா கோரிக்கை வைத்தது. பின்னர், அதை திடீரென திரும்ப பெற்றது. இது குறித்து ஐரோப்பிய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘`காஷ்மீர் தொடர்பான கோரிக்கையை சீனா திரும்ப பெற்றதால், அது குறித்து விவாதம் நடக்காது,’’ என்றார். சீனாவுக்கான ஐநா தூதர் ஜாங் அளித்த பேட்டியில், “ஐநா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பேசப்பட்டது. பாக். வெளியுறவு அமைச்சரின் கோரிக்கையை ஏற்று காஷ்மீர் குறித்தும் விவாதிக்கப்படுகிறது,’’ என்றார். ‘ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் பற்றிய கோரிக்கையை சீனா திரும்ப பெற்றுள்ளதா?’ என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அதே நேரம், இந்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள அமெரிக்கா, சீனா நாடுகளின் தலைவர்கள், இம்மாத நிகழ்ச்சி நிரலில் காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் பேசி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
