இன்று சீனாவில் கப்பலை ஏவுதளமாக கொண்டு வெற்றிகரமாக செயற்கைகோள் ஏவப்பட்டது. சீனா அரசு இதனை ஊடகங்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை மிகவும் முன்னோக்கிய திட்டமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
லாங் மார்ச் 11 ராக்கெட் மஞ்சள் கடலில் அரை – நீர்மூழ்கிக் கப்பல் மேடையில் வைத்து ஏவப்பட்டது என்று மாநில ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையில் 2 செயற்கை கோள்கள் உள்ளன. தகவல் தொலைத் தொடர்ப்புக்கு உதவக்கூடியது. பெய்ஜிங் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம், உலகளாவிய அளவில் நெட்வொர்க்கிங் சேவைகளை வழங்க நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டுகளில் சீனா தனது விண்வெளி திட்டத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கவுள்ளது. அமெரிக்க மற்றும் சீனா இரு நாடுகள் விண்வெளியில் முக்கிய சக்திவாய்ந்த நாடுகளாக மாறும் என தெரிகிறது. பெய்ஜிங் தனது சொந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.