சிவா இயக்கத்தில் சூர்யா

கடந்த பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன விஸ்வாசம் படத்தை இயக்கியவர் சிவா. இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது என்ஜிகே மற்றும் காப்பான் படங்களில் நடித்து வரும் சூர்யா அதன் பின் இறுதிசுற்று இயக்குநர் சுதாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படம் முடிந்தவுடன் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *