சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு?

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னனி நடிகர்களில் பலராலும் பார்த்துப் பொறாமைப்படும் ஒரு நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். டிவியில் பேட்டியாளாராக வந்து, பின்னர் தொகுப்பாளாராக மாறி, சினிமாவில் அறிமுகமாகி இப்போது முன்னனி நடிகனாக உயர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயனை 2012ம் ஆண்டு வெளிவந்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். அதன்பின் 2013ல் பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தார். அதற்கடுத்து வெளிவந்த படங்கள் கமர்ஷியலாக வெற்றி படங்களாக அமைய சிவகார்த்திகேயன் முன்னனி நடிகர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டார். 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பாண்டிராஜ், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள அறிவிப்பு நேற்று வெளியானது. பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை ரஜினிகாந்த், விஜய், ராகவா லாரன்ஸ் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. பாண்டிராஜ் கடைசியாக இயக்கி வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்த புதிய படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *