சிறப்பு சட்டசபை கூட்டம் என்ன சிறப்பு?

இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் மேகதாது அணை கட்டுவதற்கு. மேகதாது அணை பிரச்சனையில் ஆய்வுக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை வாபஸ் பெற வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்பட வேண்டும் என்று அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் சில அணைகள் ஏற்கனவே கட்டப்பட்டதால் தமிழகத்திற்கு பாரம்பரியமாக கிடைத்து வந்த நீரின் அளவு குறைந்ததாக தமிழக அரசு சார்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது.

இதற்கு இடையில் அண்மையில் காவிரி வேளாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் மேற்படி வாரிய அனுமதி இல்லாமல் புதிய அணை கட்டக் கூடாது என கூறியது. மேகதாது அணை கட்டுவதற்கு  அனுமதியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் மாபெரும் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதன் பின்பு  மத்திய அரசு உத்தரவை வாபஸ் வாங்கவும் அணை கட்ட தடுப்பு நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடக்க இருப்பதை வரவேற்றுள்ளார். இப்படி இருக்கும் இந்தச் சூழ்நிலையில் தான் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு முன்னோட்டமாக விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலை சந்தித்து சட்டமன்றத்தை கூட்ட கோரிக்கை வைத்தனர்.  சபாநாயகர் அவர்கள் பின்னர் அரசு பரிந்துரையுடன் ஆளுநர்கள் சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று மாலை 4 மணி அளவில்  கூட்டம் அரசு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடக்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான தீர்மானத்தை கொண்டு வருவார் இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானத்தை ஆதரித்து பேசும் வாய்ப்பு இருக்கிறது தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *