சிறந்த ராணுவ வீரர்களுக்கான விருது

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு பரம் விசிஷ்ட சேவா, கீர்த்தி சக்ரா, சவுர்ய சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவிப்பார். இதன்படி டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில், ராணுவப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். தளபதி பிபின் ராவத்துக்கு ராணுவத்தின் உயரிய விருதான ‘பரம் விசிஷ்ட் சேவா’ விருது வழங்கப்பட்டது. இறப்புக்கு பின் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *