ஆர்ஜே பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கும் LKG படத்தின் ஒரு பாடல் மட்டும் படக்குழுவினரால் வெளியிடபட்டு ரசிகர்கள் இடையே ஹிட் ஆகி உள்ளது. இந்த படத்தில் பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். தற்கால அரசியலை கிண்டல் செய்யும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் கட்சி தொண்டர் ஒருவர் படம் ரிலீஸ் ஆகட்டும் உன் கட்அவுட்க்கு செருப்பு அபிஷேகம் பண்ணிறேன் என டிவிட்டரில் கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த பாலாஜி நடிகர் சிலம்பரசன் ஸ்டைலில் இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டா பண்ணி நம்ம மாஸா காமிங்க என ரீட்வீட் செய்து உள்ளார்.
சிம்பு ஸ்டைலில் கலாய்த்த ஆர் ஜே பாலாஜி
