புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக்ஆனந்த் மீது அளவுக்கு அதிகமான சொத்துச் சேர்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அது சம்பந்தமான விசாரனை சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இவர் தட்டாச்சாவடி தொகுதி எம்எல்ஏ ஆவார். இவரது வழக்கு விசாரனை புதுச்சேரி சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. அவரும்,அவரது தந்தையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ 1.57 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பரிமுதல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. கட்டத்தவறினால் மேலும் 3-மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்க உத்தரவிட்டு உள்ளது.