வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சினேகா தான் எந்த மதத்தையோ அல்லது ஜாதியோ சார்ந்தவர் அல்ல என திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்று வாங்கி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள நடிகர் கமல் தமிழ் மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே! என கூறியுள்ளார்.