இந்தியா
சித்து இந்திய பிரதமரா?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்குச் செல்லும் கார்தர்பூர் தனிப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப்சிங் பூரி மற்றும் பாகிஸ்தான் புகழ் சித்துவும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சித்துவை பாகிஸ்தானில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார். ஏனென்றால் பாகிஸ்தான் சித்துவை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சித்துவை இந்திய மக்கள் குறை கூறுவதாக விமர்சித்து உள்ளார். மேலும் அவர் கூடிய விரைவில் இந்தியாவின் பிரதமராக வருவார் எனவும் பேசிக் கூட்டத்தில் காமெடி செய்தார்.
இம்ரான்கானின் வெளிவேஷம் விரைவில் வெளிவரும்.