வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டு முடிவெடுப்பீர்கள் எனில், அதற்கு தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே பொருள் என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். மேலும் அவர் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக எங்கள் வீரர்களின் மரணத்தை வைத்து லாபம் சம்பாதிக்க பார்ப்பது வெறுக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.