சிங் ஆவேசம்

முன்னால் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் தற்பொழுது தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

அவர் நிரூபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.மோடி அரசைக் கடுமையாகக் குறை கூறியவர்.இதற்கு மேலும் அவர்கள் நாட்டை ஆண்டால் வரலாறு நம்மை மன்னிக்காது எனவும் ரிசர்வ் வங்கி, சிபிஐ போன்றவற்றை தவறாகப் பயன்படுத்தி தங்களது கட்டுபாட்டில் கொண்டுவர முயற்ச்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் செயல் நாட்டுக்கு நல்லது இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளைப் பற்றி மிக மோசமான வார்த்தைகள்மூலம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நன்கு வளர்ந்து வந்த பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்களையும் பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டதாகவும். இதனால் மோடி அரசைப் பதவி இழக்க வைக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *