சயத் முஸ்டாக் அலி தொடர் தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் மும்பை மற்றும் சிக்கிம் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரஹானே, முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் குவித்தது. உள்ளூர் டி20 போட்டி யில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 15 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 147 ரன் விளாசினார். இதன் மூலம் டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன் விளாசிய இந்திய வீரர் என்ற சிறப்பை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இதற்கு முன் ரிஷாப் பன்ட் ஐ.பி. எல்.போட்டியில் கடந்த ஆண்டு 128 ரன்கள் எடுத்ததே இந்திய வீரரின் ஒருவரின் அதிகப்பட்சமாக இருந்தது. மேலும் டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் ஐயர் பெற்றார்.தொடர்ந்து ஆடிய சிக்கிம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து 154 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.
சிக்ஸர் மன்னன் ஸ்ரேயாஸ் ஐயர்
