தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எதை தின்னால் பித்தம் தெளியும் என்பதை போல் உள்ளது. எப்படியும் வருகிற உலக கோப்பைக்கு அணியை தயார் செய்ய முனைப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவர்களது நடவடிக்கை தகுந்த பலன் தராமல் எதிர்மறையான பலன்களை தந்து வருகிறது. குறிப்பாக முதலில் முன்னணி வீரர்களான சுமித், வார்னர் போன்ற வீரர்களை அவசரப்பட்டு ஒரு வருடங்களுக்கு தள்ளிவைத்தது. அதன்பிறகு பயிற்சியாளர் ராஜினாமா செய்தார். அதன்பிறகு டைரக்டர் மார்க்டைலர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு வீரர்களையும் மாற்றிப் பார்த்தாலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலியா அணி ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இழந்து உள்ளது. இந்த சூழலில் சுழல் ஜாம்பவான் வார்னே அவர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு தனது ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார். அதாவது தற்போதுள்ள சூழ்நிலையில் முன்னாள் வீரர்களின் ஆலோசனையை கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக பெற வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மெக்ராத், மைக்கேல் கிளார்க் போன்றவர்களை பேட்டிக் மற்றும் பயிற்சியாளராக நியமித்தால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி உள்ளார்.சிறந்த வீரர்களை உருவாக்கும் முயற்சியில் தான் தயராக உள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கலை தீர்க்க தயார்
