சாதி அரசியல் பற்றி இயக்குனர் சேரன்

நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் நண்பர்களே எனக்கு சாதி பற்றிய விவாதம் பிடிக்காது. அதைப்பற்றிய விவாதங்களே உணர்ச்சிகளை தூண்டி மனிதம் இழக்கச்செய்கிறது என்பதை தொடர்ந்து தமிழகத்தில் பார்த்து வருகிறோம்.. எனவே இங்கு சாதி ஓட்டு அரசியல் இருக்கும்வரை அதற்கு தீர்வு கிடைக்காது. நாமும் ஒரு காரணம் ஆகவேண்டாம். சாதியற்றவன் நான்.

இங்கே சாதி ஒழிப்பை உருவாக்க முயல்பவர்களை சிலர் அனுமதிப்பதில்லை.. வளர்ப்பதுமில்லை.. காரணம் மக்கள் சாதியை மறந்துவிடக்கூடாது என பலர் உறுதியாக இருக்கிறார்கள்.. அதற்கான காரணங்களே சமீபத்திய பிரச்னைகள். பொருளாதார உயர்வே இதற்கு தீர்வு.. அதை கற்பிக்க வேண்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பாவையும், சாதி இரண்டொழிய வேறில்லையும் இன்னும் பாடப்புத்தகாதுல வச்சிருக்கொம்.. அப்பறம் அரசாணையில சாதிய அட்டவணையில 300க்கு மேல சாதிப்பெயரை வச்சிருக்கும் … என்ன கொடுமை.. எதாவது ஒன்ன தூக்குங்கய்யா…என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *