சாதனைக்கு தேவை இன்னும் 137 ரன்கள்

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் தென்ஆப்ரிக்கா அணி 222 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் குவின்டன் டிகாக் 87 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அசத்தினார். இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 154 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து தன் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய தென்ஆப்ரிக்கா இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 128 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் மட்டும் 50 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். அடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்தது 60 ரன்கள் எடுத்து உள்ளது.

 

இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 137 ரன்கள் தேவைபடுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெறும் பட்சத்தில் தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் ஆசிய அணி எனும் மகத்தான சாதனையை படிக்கும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் தென் ஆப்ரிக்கா மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *