சாணக்கியர் சிந்தனைகள்!

குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

கல்வியே சிறந்த நண்பன். கல்விமான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.

பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக்கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள்கிறான்.
பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம், ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அவசியம்.

ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!

எந்த ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் உங்களிடம் நீங்களே மூன்று கேள்விகளை கேட்கவேண்டும்: நான் ஏன் இதனைச் செய்யவேண்டும், முடிவுகள் என்னவாகவிருக்கும், நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்தக்கேள்விகளை ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் திருப்திகரமான விடைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்களேன்.
பயம் உங்களை நெருங்கும்போது அதனை தாக்கி அழியுங்கள்!

உலகின் ஆகப்பெரிய சக்தி இளமையும் பெண்ணின் அழகும்தான்!

ஒரு வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.
மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.
உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.

 

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.
ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *