சல்மான் கான். இந்த ஒற்றைப் பெயர் போதும். 53 வயதாகும் சல்மான் கானின் திரைப்படங்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ரம்ஜான் தினத்தன்று வெளியான ‘பாரத்’ திரைப்படம், தனது முதல் நாளில் 42.30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ரம்ஜானின் போது சல்மான் கானின் திரைப்படங்கள் வெளிவருவது வழக்கம். அப்படி வெளிவந்த பெரும்பான்மை படங்கள் சூப்பர் – டூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அதேபோல, படு மாஸ் ஓப்பனிங்கும் கிடைக்கும்.
இந்த முறையும் ‘பாரத்’-க்கு அந்த மாஸ் ஓப்பனிங் கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால், இதுவரை இல்லாத அளவுக்கான ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இது குறித்து பிரபல திரைப்பட வர்த்தக வல்லுநர் தருண் ஆதர்ஷ், “சல்மான் கான் இந்திய அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ‘பாரத்’ மூலம் ஏற்படுத்தியுள்ளார். மீண்டும் பாலிவுட்டில், தன்னால்தான் மிகப் பெரிய ஓப்பனிங் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.