தற்பொழுது நாடு முழுவதும் ஒலிக்கப்படும் ஒரு சொல் “சர்ஜிக்கல் ஸ்ரைக்”.
அப்படியென்றால் என்ன ஏன் இப்பொழுது அதிகமாக உபயோகிகப்படுகிறது இதன் பின்னனி என்ன?
முதலில் சர்ஜிக்கல் ஸ்ரைக் என்றால் என்ன?
எதிரணி வீரர்களின் முக்கிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை மிகத் துல்லியமாகத் தாக்குதல் மூலம் அவர்கள் எதிர்பாக்காத சமயத்தில் அடியோடு காலி செய்வதே ஆகும்.
திட்டமிடுதல் பிரிவில் 96 வீரர்களும், தாக்குதல் பிரிவில் 124 வீரர்களும் இருப்பார்கள்.
இது குறித்து முன்னால் அதிகாரிகள் கூறியதவாது. இலக்குகளை நகரும் வகையில் அமைத்து அதன் மூலம் இலக்குகளை அடைவது நமக்கு எந்த வீத பாதிப்பும் இல்லாமல் அனைத்து பாதிப்புகளையும் எதிரி நாடுகளுக்கு உண்டாக்குவதே அதன் நோக்கம் ஆகும்.
தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் ஆளுங்கட்சியும், ஆண்டகட்சியும் வேறு எதைப்பற்றியும் விவாதிக்க வழியில்லாமல் “சர்ஜிக்கல் ஸ்ரைக்” பற்றிப் பேசியுள்ளார்கள்.
சாதராண குடிமகனாக இவர்களிடம் கேட்க வேண்டி உள்ளது.
இவர்கள் என்ன? இவர்களது சொந்த பணத்தில் அல்லது இவர்களது கட்சி பணத்தில் “சர்ஜிக்கல் ஸ்ரைக்” செய்தார்கள் என்றால் இல்லை. இவர்களது தலைமையின் கீழ் நேரிடையாக நடந்தது என்றால் இல்லை. இவர்கள் சர்ஜிக்கல் நடத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறிந்தார்களா என்றால் இல்லை. அப்புறம் எப்படி இவர்கள் அதைப்பற்றிப் பேச முடியும்.
இவர் சொல்கிறார் எங்கள் ஆட்சியில் தான் “சர்ஜிக்கல் ஸ்ரைக்” செய்தோம். அதற்கு அவர் சொல்கிறார் நாங்களும் செய்தோம் என்று. என்ன ஒரு பக்குவமில்லாத விவாதம். உண்மையில் ஆராய்ந்தால் பாதுகாப்புக் குறைவாக இருந்தால் மட்டுமே எதிராளிகளின் இடந்தில் ஊடுருவ துணிந்து அருகில் முகாம்களை அமைப்பார்கள். ஆதலால் தான் “சார்ஜிக்கல் ஸ்ரைக்” செய்ய வேண்டி உள்ளது.
எல்லையே தாண்டி வந்தால் கண்டிபாக மரணம் என்றால் எவ்வாறு ஊடுருவார்கள்.
சர்ஜிக்கல் ஸ்ரைக்-ல் உரிமை கொண்டாடுபவர்கள் ஏன் எதிராளிகளின் தோட்டாகளுக்கு உயிர் இழக்கும் வீரர்களின் மரணத்தில் உரிமை கொண்டாடுவதில்லை. லாபத்தில் மட்டும் பங்கு எடுப்பது, மரணத்தில் பங்கு எடுப்பதில்லையே ஏன்?.
எவ்வளவு வீரர்கள் எல்லையில் காரணமே இல்லாமல் தீவிரவாதிகளின் தோட்டாக்களுக்கு மடிகிறார்கள். ஆனால் அமெரிக்கா, வடகொரிய போன்ற நாடுகளிள் ஏதாவது ஒரு வீரரை அல்லது ஒரு குடிமக்களை எதிர் நாட்டினர் சுடமுடியுமா? அப்படிச் சுட்டால் அந்த எதிரி நாடு என்ன ஆகியிருக்கும் என்பது உலகுக்குத் தெரியும்.
ஆனால் இங்கு இதுபோன்ற ஏதாவது செயலை எதிர்பார்க முடியுமா, யார் மத்திய அரசாக வந்தாலும் அதே நிலைதான். ஒரு வீரர் இறந்தாலும் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று எதிர்நாட்டினர் உணர்ந்தால் ஏன் இத்தனை அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்.
வளர்ச்சி பற்றிப் பேசுங்கள் விவாதியுங்கள், நாங்கள் இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்தோம். நீங்கள் எந்த எந்த திட்டங்களைக் கொண்டு வந்தீர்கள், பலன் என்ன? தீமை என்ன? விவாதியுங்கள், ஒரே மேடையில் கூட விவாதியுங்கள் அதை விட்டு விட்டு எல்லாருக்கும் பொதுவான, பாதுக்காப்பான ராணுவத்தைக் கொண்டு வராதீர்கள் அசிங்கம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான் என்பதை உணருங்கள். பாதுகாப்பிலும், வெளியுறவுத்துறையில் மட்டுமாவது ஒன்று சேர்ந்து செயல்படுங்கள் அப்பொழுது எதிர் நாட்டினரின் தாக்குதலையும், வளர்ச்சியையும் நாம் எதிர்கொள்ள முடியும்.
பாராளுமன்றத்தில் பேசினால் கூடப் பரவாயில்லை. இவர்கள் விவாதிப்பது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் என்ன வென்று சொல்வது இனம் புரியாத வேதனை.
மறைந்த பிரதமர்கள் இந்திர காந்தி, வாஜ்பாய் அவர்கள் ஆட்சி காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றியும் பெற்றது நமது நாடு.
அவர்கள் எல்லாம் ஒருமையில் தனகுத்தான் உரிமை என்று கொண்டாடவில்லை. அது தான் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அனைவருக்கும் உரிமை கொண்டாடக் கூடிய உரிமை அது. எந்தக் கட்சிக்கும் தனி நபருக்கும் சொந்தமானது அல்ல என்பது நாம் அனைவருக்கும் தெரியும் தெரிந்தாலும். என்ன செய்வது தேர்தல் வந்து விட்டதே மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுமாறு பேசினால் தான் கவனிப்பார்கள் என்று உணர்வதால் ஏற்படக்கூடிய விளைவுதான் இந்தப் பேச்சு.
இவற்றை மட்டுமாவது அரசியல் ஆக்காமல் விட்டு விடுங்கள்.