நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் குறித்து தங்கள் பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் சித்தரிப்புக்கு உண்டான எதிர்ப்பு மற்றும் இன ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கார்ட்டூன் கலைஞருக்கு தங்கள் ஆதரவை ஆஸ்திரேலிய பத்திரிக்கையான ‘ஹெரால்ட் சன்’ மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
பிரபல கார்ட்டூன் கலைஞரான மார்க் நைட் வரைந்த அந்த ஓவியம்,ஒரு குழந்தை போல உடைந்த தனது ராக்கெட்டுக்கு அருகில் குதித்து குதித்து செரீனா அழுவது போல இருந்தது.
இந்த கார்ட்டூன் குறித்து விமர்சித்தவர்கள் இனவாத மற்றும் பாலியல் பாகுபாடு கொண்ட பிம்பங்களையும், எண்ணங்களையும் இந்த கார்ட்டூன் வெளிப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினர்.
சர்ச்சை கார்ட்டூன்.
