புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய விமான படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லபட்டதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
தற்போது நவஜோத் சிங் சித்து, 300 தீவிரவாதிகள் கொல்லபட்டது உண்மையா அல்லது பொய்யா? அப்படியானால் அதன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் நீங்கள் எதிர் நாட்டுடன் சண்டையிடுவதாக வேடமிட்டு சொந்த நாட்டை ஏமாற்றுகிறீர்கள். நாட்டில் புனிதமாக கருதபடும் ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதை நீங்கள் நிறுத்துங்கள் என கடுமையான கேள்விகளை மத்திய அரசை நோக்கி எழுப்பியுள்ளார்.