சர்க்கார் திரை விமர்சனம்

நீண்ட சர்ச்சைக்குப் பிறகு திரைக்கு வந்து இருக்கும் சர்க்கார் சாகசம் செய்ததா? இல்லையா? எனப் பார்ப்போம்.
இயக்குநர் முருகதாஸ் தனது முத்திரையை, தனது ஒவ்வொரு முந்தைய படத்திலும் தெளிவாகப் பதித்திருக்கிறார். ஆனால் இப்படத்தில் அவரது படைப்பு குறைந்துள்ளது, விஜயின் படைப்பு அதிகரித்துள்ளது.
திரையுலகின் முக்கிய நபர்களால் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் (முருகதாஸ், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான்) எவ்வாறு உள்ளது என்றால் மக்களின் அடிப்படை ஒட்டுரிமை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.

கதைச் சுருக்கம்:

வெளிநாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருப்பவர் சுந்தர ராமசாமி. அவர் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கு ஓட்டளிக்க தாயகம் வருகிறார். அதற்குள் அவரது ஓட்டைப் போட்டுவிடுகிறார்கள். அவரால் ஓட்டு அளிக்க முடியவில்லை. அவர் எவ்வளவுதான் முயற்சித்தாலும் ஓட்டளிக்க இயலவில்லை. அதனால் அவர் ஆத்திரமடைகிறார். சட்டவிதிகளின் படி தேர்தல் முடிவு அறிவிப்பதில் தள்ளிப்போகிறது. ஆளும் கட்சியின் கவனம் அவர்மீது திரும்புகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் கள்ள ஓட்டினால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கிறார். அனைத்துத் தொகுதிகளிலும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுக்கிறது. மொத்தமாகத் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.

மாசிலாமணி பதவியேற்கத் தயாராகிறார் தேர்தல் ஆணையத்தின் உத்தர்வல் முதல் அமைச்சர் பதவியை ஏற்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
மாசிலாமணியை (பழகருப்பையா) எதிர்த்துச் சுந்தர் ராமசாமி (விஜய்)
அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கதையில் பரபரப்பு ஏற்படுகிறது. இறுதியில் சர்க்கார் யாரிடம் சென்றது என்பதே கதை.இவற்றில் வெற்றி பெற்றாரா? இல்லையா? சர்க்கார் அமைத்தாரா? இல்லையா?
நாயகன் தனியாளாகப் படம் முழுவதும் வந்து செல்கிறார்.சண்டை, பாடல் காட்சிகளில் எப்பொழுதும் இல்லாததை விட வேகத்தைக் கூட்டியுள்ளார். வசன முறையில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். தனது அரசியல் ஆசையை இப்படத்தில் கவனிக்கும்படி காட்சிப் படுத்தி உள்ளார். என்றே தோன்றுகிறது.
கீர்த்தி சுரேஷ்க்கு அதிகமான வாய்ப்புகள் இல்லை. இரண்டே இரண்டு காட்சிகளில் வந்து போகிறார்.
அரசியல்வாதியாகப் பழகருப்பையா மற்றும் ராதாரவி நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அரசியல்வாதிகள் என்பதால் திரையிலும் வித்தியாசம் தெரியவில்லை. அந்த அளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளனர்.
பழகருப்பையாவின் மகளாக வரலட்சுமி நடித்துள்ளார். தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். வரலெட்சுமியின் நடிப்பு சிறப்பாக உள்ளது அவரது வசனங்கள் அழுத்தமாக உள்ளது.தந்தையை காலி செய்வதிலும், விஜய்யிடம் பேசும் வசனங்களும் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஓரளவுக்கு ரசிக்கும் படி உள்ளது. முதல் பாதியில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் தனது சமுதாய அக்கறையைத் தனது எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார். சமூகத்தின் அவலநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவு கங்காதரன் இவரது ஒளிப்பதிவு அழகாகவும் மேலும் படத்திற்கு மெருகூட்டி உள்ளது.

இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஜல்லிக்கட்டு, நீட், ஹைட்ரோ கார்பன், கந்துவட்டி, தற்கொலையென அனைத்து சம்பவங்களையும் ஒரு படத்தில் கொண்டு வர முயற்ச்சித்து உள்ளார். ஆனால் தனியாக ஒரு விஷயத்தை விவாதிக்க தனியாக ஒரு படம் தேவைப்படும் என்பதை புரிந்து கொண்டால் சரி.

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த படம், அரசியல் படம், மற்றவர்களுக்கு?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *