தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த “சர்க்கார்” படம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து தனது Twitter-ல் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்று கூறியுள்ளார்