தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கும் “சர்க்கார்” படம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் நடிகர்மான கமஹாசன் தனது Twitter-ல் கருத்து தெரிவித்துள்ளார்.
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசுத் தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். எனக் கூறியுள்ளார்.