அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் நாகை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களை நேரில் சந்தித்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நிவராண பொருட்களை வழங்கினார்.
அதனை நாகை, கீழ்வேளுர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுகொண்டார்.
பிறகு அங்கு உள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.அப்போது மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களும் உடன் இருந்தார் அப்போழுது சரத்குமாரிடம் சிறு துறைமுகம் அமைக்க நிதி உதவி கோரப்பட்டது.
அதற்குச் சரத்குமார் அவர்கள் ரூ.50 லட்சம் வழங்குவதாக ஏற்றுக்கொண்டார்.