சபரிமலை விவகாரம் தொடர்பாகக் கேரள முதல்வர் அனைத்துகட்சி கூட்டத்தை நவம்பர் 15-ம் தேதி அழைத்துள்ளார்.அனைத்து கட்சியினரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு மனுவை ஜனவரி 22-ம் தேதி சுப்ரீம்கோர்டீல் விசரனைக்கு வர உள்ள நிலையில் இச்கூட்டம் முக்கியம் பெறுகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் பங்கேற்கலாமெனத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் வந்த்து கொண்டே இருக்கிறது.
இது சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியடைந்தது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலையில் இன்று கோயில் நடை திறக்கப்படுகிறது. அது சம்பந்தமாகப் பேட்டியளித்த கேரள முதல்வர் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது என்றும். வரும் பெண் பக்தர்களுக்குக் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மரபுகள்குறித்து ஆழ்ந்து ஆரய்த்து முடிவுகள் எடுக்கக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சில பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய முற்பட்டனர். அது விவாதப் பொருளானது. அதன்பிறகு அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவியது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ரெஹானா எந்தவித விருதமும் இல்லாமல் அரிசிக்குப் பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாகக் கட்டிக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்றார்.
அங்கு ஏற்பட்ட பிரச்சனையின் இறுதியில் திருப்பி அனுப்பபட்டார். இதனால் கேரள மாநில முஸ்லீம் ஜமாத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஐயப்பன் கோவிலுக்குத் தரிசனம் செய்ய முயன்றது மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், சம்பிரதாயங்களையும் மதிக்கத் தவறி காயப்படுத்தினார். எனவே அவரையும், குடும்பத்தினரையும் தள்ளி வைக்குமாறு எர்ணாகுளம் முஸ்லீம் ஜமாஅத் அறிவுறுத்தி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.