தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை ஐய்யப்பனின் பெயரால் மத பிரசாரம் செய்யக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த ஆளும் இடதுசாரி முன்னணி அரசு மும்முரமாக இருந்த நிலையில், அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
இந்த பிரச்சினை தற்போது அடங்கி இருக்கும் நிலையில், சபரிமலை விவகாரத்தை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த மாநில கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.
சபரிமலை விவகாரம் அரசியல் ஆக கூடாது
