இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியாவுக்கு கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் பங்கு பெற இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்து ஐசிசியின் உழல் தடுப்பு பிரிவு உத்திரவிட்டு உள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்போது தேர்வு குழு தலைவராக இருந்த ஜெய சூர்யாவை ஐசிசி விசாரித்தது. அதில் விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்காத ஜெயசூரியாவுக்கு ஐசிசி தடை விதித்து அதிரடி உத்தரவு இட்டு உள்ளது.
சனத் ஜெயசூரியாக்கு தடை?
