சத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமானது. நக்சலைட்களின் அச்சுறுத்தலுக்கு இடையே மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகளாகும்.இதில் 18 தொகுதிகளில் கடந்த12-ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது
மீதமுள்ள 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருக்கிறது.
மக்கள் மிக ஆர்வமுடன் காலை முதல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவருக்கின்றனர். இந்த மொத்தமுள்ள 90 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 தேதி நடைபெறும். இங்கே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இக்கு நேற்று பாதுகாப்பு படையில் ஈடுபட்டு இருந்த கான்ஸ்டபிள் ராஜீவ்குமார் சிங் மதியம் தன்னுடன் வேலைப்பார்த்த மற்றொரு போலிஸ்சின் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக்கொண்டார்.
இந்த 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
இங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக வும், காங்கிரஸ்சும் உள்ளன.