சத்தீஸ்கரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமானது. நக்சலைட்களின் அச்சுறுத்தலுக்கு இடையே மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகளாகும்.இதில் 18 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மீதமுள்ள 72 தொகுதிகளில் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.இந்த மொத்தமுள்ள 90 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 தேதி நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்த 18 தொகுதிகளில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாகும்.அதனால் இங்கே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் நேற்று நக்சலைட்டுகளால் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.இதில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற தாக்குதலில் அதில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு படையினர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இங்கு நடைபெறும் வாக்குப்பதிவு சாட்டிலைட் மற்றும் டிரேசன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இங்குக் கண்காணிப்பில் மேலும் 12 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *