சண்டைகோழி 2 விமர்சனம்

படம்: சண்டைகோழி2

நடிப்பு: விஷால், கீர்த்தி சுரேஷ்

இயக்கம்: லிங்குசாமி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதில் இருந்து திருவிழாதான் கதைக்களம் அவற்றில் காதல், துரோகம், கிராமம், பாடல், வில்லத்தனம் என தனது முத்திரையை பதிக்க லிங்குசாமி முயன்றுள்ளார். ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளார். திரைக்கதையில் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மசாலா கலந்து கொடுந்துள்ளார்.

ஊர் திருவிழாவில் ஏற்படும் பிரச்சனை எங்கு கொண்டு போய் முடிகிறது. என்ற சின்ன கதையை வைத்து ஒரு படமாக கொடுத்து உள்ளார்கள்.

நின்றுபோன திருவிழாவை நடத்த ராஜ்கிரன் முயல்கிறார் பல தடைகள் வருகின்றன. அந்தத் தடைகளை கடந்து செல்லும் ராஜ்கிரணுக்கு காயம் ஏற்பட்டு  நடக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்படுகிறார். அதை அவரது மகன் விஷால் எவ்வாறு கையாளுகிறார் என்பதே மீதி கதை.

தன் கணவனை கொன்றவர்களின் வம்சத்தை அழிக்க சபதம் ஏற்கிறார் வரலட்சுமி அனைவரையும் திட்டமிட்டு கொன்று விடுகிறார். மிஞ்சிய ஒருவரையும் கொன்றார அல்லது திருவிழா நடந்ததா எவ்வாறு நடந்தது என்பதை சொல்லியுள்ளார் இயக்குனர்.

விஷால்:

விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது போல் கதை ,சும்மா விடுவாரா  புகுந்து விளையாடி உள்ளார் . பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஓரளவுக்கு வித்தியாசத்தைப் காட்டியுள்ளார். இந்த கதைக்கு கருவாக உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்:

மதுரை பெண்ணாக அறிமுகமாகிறார். பாடல் காட்சிகளிலும் மற்ற இடங்களிலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இன்னும் கொஞ்ச நாளைக்கு இவர்கள் காட்டில் மழை  என்றே தோன்றுகிறது.

ராஜ்கிரண்:

கதையின் பெரிய மனிதராக சிறப்பாக தனது வழக்கமான முத்திரையை பதித்துள்ளார். கம்பீரமான, கிராமத்து பழக்க வழக்கம் என எல்லாவற்றையும் சிறப்பாக செய்துள்ளார். இவர் உந்துசக்தியாக உள்ளார். வாழ்த்துக்கள்

வரலட்சுமி:

வரலட்சுமியின் நடிப்பில் அனல் பறக்கிறது. அனைவரது பார்வையும் இவர் மீதே உள்ளது. அனைவரது மார்க்கையும் இவர் ஸ்கோர் செய்துவிடுகிறார். கணவனை கொன்றவர்களை கொல்ல இவர் தீட்டும் திட்டங்கள் அதிர்வை ஏற்படுத்துகிறது.

யுவன்:

இசையமைப்பில் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். பாடல்கள் ஒரு முறை முனுமுனுக்கும் படி உள்ளது ஆக்ஷன் கதைகளுக்கு அதிர்வான இசையை கொடுத்துள்ளார்.

                                                        சண்டை பிரியர்களுக்கு சிக்ஸர்
                                                            மற்றவர்களுக்கு திருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *