சச்சின் மீதான புகாரை தள்ளுபடி செய்தது பிசிசிஐ!

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்று அறிவித்த பின்பு இதனை ஜெயின் தள்ளுபடி செய்தார்.
தனக்கும் மும்பை அணிக்கும் எந்த நிதி தொடர்பும் கிடையாது என்று சச்சின் கூறியிருந்தார்.

பிசிசிஐ ஓம்பட்ஸ்மன் தலைவர் டி.கே.ஜெயின் சச்சின் டெண்டுல்கர் மீதான புகாரை தள்ளுபடி செய்தார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்று அறிவித்த பின்பு இதனை ஜெயின் தள்ளுபடி செய்தார். சச்சின் இனி கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இருக்கபோவதில்லை என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ இதனை நெறிமுறைப்படுத்தினால் பிறகு முடிவுப்செய்வதாகவும். தற்போது எந்த கிரிக்கெட் அணிக்கும் ஆலோசகராக இல்லை என்றும் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

டெண்டுல்கர் மீதான இந்த புகார் ஆதாரமற்றது என கூறி இந்த வழக்கை நிராகரித்தார். “சச்சின் டெண்டுல்கர் அளித்த சட்டப்பூர்வமான பதிலே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய போதுமானது” என்று கூறினார்.

டெண்டுலகர் சட்ட விளக்கத்தில் ”கிரிக்கெட் நிர்வாக்குழுவின் பதவிக்காலம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதனால் கிரிக்கெட் நிர்வாகக்குழுவுக்கான நிபந்தனைகள் பொருந்தாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக ஓம்பட்ஸ்மனின் தலைவர் டி.கே.ஜெயின் சன்னின் மற்றும் லட்சுமணனுக்கு நோட்டிஸ் அனுப்பினார். காரணம் அவர்கள் கிரிக்கெட் ஆலோசனை குழுவிலும், ஐபிஎல் அணிக்கு ஆலோசகராகவும் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சச்சின் மும்பை அணிக்கும், லட்சுமணன் ஹைதராபாத் அணிக்கும் ஆலோசகர்களாக உள்ளனர். இந்த குற்றச்சாட்டை மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பதிவு செய்தார்.

இது ஓம்பட்ஸ்மன் விசாரிக்கும் மூன்றாவது வழக்காகும். ஏற்கெனவே முன்னாள் கேப்டன் கங்குலி மீது மூன்று பதவிகளை வகிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர், டெல்லி கேப்பிட்டல் ஆலோசகர், கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர் என மூன்று பதவிகளை கங்குலி வகிக்கிறார் என்ற சாட்டு எழுந்தது.

கங்குலி, சச்சின், லட்சுமணன் இணைந்து தான் 2017ல் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்தனர். பிசிசிஐ அதிகாரிகளின் தகவல்படி சச்சின் மும்பை அணியிடமிருந்து எந்த பணத்தையும் சம்பளமாக பெறவில்லை. பணம் ஏதும் வாங்காமல் தான் மும்பை அணிக்கு ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்பட்டது. மேலும், இந்த மூவரும் கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு எந்த நிதி பயனும் இல்லாமல் உதவி வருவதாக கூறப்பட்டது.

இதையேதான் சச்சின் தனது விளக்கத்திலும் கூறியுள்ளார். சச்சினுக்கும் மும்பை அணிக்கும் எந்த நிதி தொடர்பும் கிடையாது. அணி வீரர்கள் தேர்வு போன்ற விஷயங்களிலும் நான் தலையிடுவது கிடையாது. அணியில் தன்னை இணைப்பில் வைத்திருப்பதாக மட்டும் கூறினார்.

அணிக்கு தலைமை பயிற்சியாளர் என்று ஒருவர் இருக்கிறார். அவரே அணி விஷயங்களை கவனித்து கொள்கிறார். நான் எந்த செயலிலும் ஈடுபடுவதில்லை என்று விளக்கியிருந்தார். தற்போது இந்த வழக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *